சமயபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே நடுஇருங்களூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வேணுகோபால் மகள் கீர்த்திகா(19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கீர்த்திகா, அவரது பெரியப்பா மகன் க.முருகனுடன்(28) இரு சக்கர வாகனத்தில் கொள்ளிடம் டோல்கேட் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திகா நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

