தலைக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைக்கவசம் அணிந்த நபர்களால் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் 6 இடங்களில் சங்கிலிப்பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.
நடைப்பயிற்சி சென்றவரிடம் 4 சவரன் : திருச்சி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கி. கார்த்திக் (43), சொந்தத் தொழில் செய்கிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சியாக பந்தயக்குதிரைச் சாலையில் சென்ற போது தலைக்கவசம் அணிந்தவாறு வந்த மர்ம நபர் அவரின் கழுத்தில் கிடந்த 4 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார். கே.கே. நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவமனை ஊழியரிடம் 3 சவரன் : பாலக்கரை, துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ் மனைவி ஜூலி (52). இவர் அமெரிக்கன் மருத்துவமனையில் உள்ள விடுதியில் காப்பாளராக (வார்டன்) பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பணிக்கு மார்சிங்பேட்டை பிரிவுச் சாலை புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அருகே நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் ஜூலியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
முயற்சியில் தப்பியது
நகை : மாநகராட்சி அலுவலகம் அருகே நடைப்பயிற்சி சென்ற ஒரு பெண்ணிடமும் தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சங்கிலி பறிக்க முயன்றதில் அந்த பெண் சங்கிலியைப் இறுகப்
பற்றிக்கொண்டதால் நகை தப்பியது.
சனிக்கிழமை பாலக்கரை: பாலக்கரை அருளானந்தபுரத்தைச் சேர்ந்த ராஜன் மனைவி ராணி மல்லிகைபுரம் பகுதியில் சனிக்கிழமை சென்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினராம். பாலக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.
காந்திச்சந்தை வரகனேரி :
வரகனேரி பகுதி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த கென்னடி மனைவி ஜான்சிராணி. இவர் வெயில் உக்கிரத்தால் பிற்பகல் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் ஹாலில் மேசையில் இருந்த மடிக்கணினி, விலை உயர்ந்த 2 ஸ்மார்ட் செல்லிடபேசி ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டனராம். தலைக்கவசம் அணிந்த இருவர் அந்த தெருவில் நடமாடியது தெரியவந்தது. காந்திச்சந்தை போலீஸார் விசாரிக்கின்றனர்.
புறநகர் பகுதியில் 14 பவுன் வழிப்பறி: திருச்சி அரியமங்கலத்தை அடுத்துள்ள காட்டூர், பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவர் சனிக்கிழமை மாலை காட்டூர் நாகப்பாசாமி கோயில் தெருவில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி 14 சவரன் நகைகளை வழிப்பறி செய்து தப்பினார். திருவெறும்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
நெருக்கடி அளிக்கும் நீதிமன்றம்: தலைக்கவசம் அணிவது கட்டயமாக்கப்பட்டுள்ள நிலையில், தலைக்கவசம் அணியாத நபர்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என நீதிமன்றம் ஒரு பக்கம் கேள்வி கேட்கும் நிலையில், மறுபக்கம் தலைக்கசவம் அணிந்த நபர்களால் நடைபெறும் சங்கிலிப்பறிப்புச் சம்பவங்களுக்கும் போலீஸாரே பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸார் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து!

பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடி
ஆஸி.யின் முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்! 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

