திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி பாபு சாலையைச் சேர்ந்தவர் முர்துஷா மகன் ஷாஜகான் (47). இவர் சிந்தாமணி அண்ணாசிலைப் பகுதியில் பழ வியாபாரம் செய்கிறார். சனிக்கிழமை காலை கடையில் இருந்த இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சிந்தாமணி காந்தி நகரைச் சேர்ந்த ம. பாலு என்கிற டோரி பாலு (39) ரூ.1000-ஐ பறித்துச் சென்றார்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஷாஜகான் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அய்யாளம்மன் படித்துறை அருகே ரோந்து சென்றபோது, அந்த வழியாக வந்த டோரிபாலுவை போலீஸார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் டோரி பாலு கோட்டை காவல் நிலையத்தின் ரெளடி பட்டியலில் உள்ளவர் என்பதும், கோட்டை காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட டோரி பாலு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

