நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்படும் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்படும் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்டவிநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக பிளாஸ்டர் ஆப்பாரிசனால் செய்யப்பட்ட ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பழக்கம் பரவி வருகிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயன கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.  இத்தகைய  சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம்.  அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடங்கள் : திருச்சி - மேலச்சிந்தாமணியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியிலுள்ள காவிரியாறு,   சோமரசம்பேட்டை -உய்யக்கொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூர்-  பெருவளை வாய்க்கால்,  ராம்ஜி நகர்-  கட்டளைவாய்க்கால்,  லால்குடி - அய்யன் வாய்க்கால்,  திருவெறும்பூர்,துவாக்குடி - வேங்கூர்காவிரியாறு,   நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், துறையூர், தாத்தையங்கார்பேட்டை பகுதிகள்- - காவிரியாறு, உப்பிலியபுரம்- புளியஞ்சோலை வாய்க்கால், காவிரியாறு, மணப்பாறை- மாமுண்டியாறு, வையம்பட்டி- பொன்னணியாறு அணை,  துவரங்குறிச்சி- பூதநாயகி அம்மன் கோயில் குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.