தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

திருச்சியில் 68.5 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Updated On :25 பிப்ரவரி 2019, 8:59 am IST

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த சந்திரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி கொண்டு வந்த  ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 68.500 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல்,  திருச்சியிலிருந்து கோலாலம்பூர்  செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போது தஞ்சாவூரை சேர்ந்த கலைவாணன்(37) என்பவரிடமிருந்து அனுமதியின்றி வைத்திருந்த இந்திய பணம் 
ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.