நிலத்தை விற்று பணம் கொடுக்காததால் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கள்ளையைச் சேர்ந்தவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி (45). தொழிலாளி. இவர் திங்கள்கிழமை மாலை அதவத்தூர் அருகே வட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கிருஷ்ணமூர்த்திக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ஆனந்திக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 2 ஆவது மனைவி லட்சுமிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணமூர்த்தி இரு மனைவிகள் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தாயார் நாகம்மையாருடன் கள்ளையில் வசித்து வந்துள்ளார்.
அண்மையில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை முதல் மனைவி ஆனந்திக்கு கொடுத்துள்ளார். லட்சுமி தரப்பினருக்கு ஏதும் தரவில்லையாம்.
இந்நிலையில், லட்சுமியின் மகன் சுந்தர்ராஜ் (18) வேலைக்குச் சென்றுபிறகு கிருஷ்ணமூர்த்தி மனைவியை பார்க்க மதுபோதையில் வந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு திரும்பி வந்த சுந்தர்ராஜ் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தி கள்ளைக்கு புறப்பட்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து, அவரை பின்தொடர்ந்து சென்ற சுந்தர்ராஜ், அதவத்தூர் பகுதியில் தந்தை கிருஷ்ணமூர்த்தி மடக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்து சடலத்தை அங்கேயே போட்டுச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சுந்தர்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
