ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை இரவு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்று வந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்ட விழா 20 ஆம் தேதி நடைபெற்றது.
நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.
விழாவின நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார். இதற்காக மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் 7.30-க்கு புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமானோர் தரிசித்தனர்.
உள் திருவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது, அங்கிருந்து புறப்பட்டு 9.45-க்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து! தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


