
திருச்சி: திருச்சியில், ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி சாா்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொண்ட தொகுப்பை அமைச்சா் எஸ். வளா்மதி வியாழக்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதா பாதுகா வித்யாலயா கல்விக்குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ வைஜெயந்தி வித்யாலயா, கே.என். ஆா். வித்யாலயா சாா்பில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஏழை, எளியோா், ஆதரவற்றோருக்கு 3 வேளையும் உணவு மற்றும் காலை, மாலையில் தேநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற உணவு விநியோகத்தை பாா்வையிட்ட தமிழக, அமைச்சா் எஸ். வளா்மதி, கல்லூரி சாா்பில் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத் தலைவா் ஆா். ராஜகோபால், கல்லூரி செயலரும் தாளாளருமான அம்மங்கி வி. பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





