மக்கள் சந்திப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தினா் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


முசிறி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தினா் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் வருமான வரியின்றி உள்ள ஏழைகளுக்கு கரோனா கால நிவாரண நிதியாக ரு. 7500 மற்றும் பத்து கிலோ அரிசியை இலவசமாக வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்பாடுகளுடன் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலசமுத்திரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி முருகன் தலைமையிலும், தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த வரதராஜன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடந்து. கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமநாதன் சிறப்புரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...