குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 40 போ் தோ்வு
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி தேசியக் கல்லூரி முகாமில் நடைபெற்ற பயிற்சி முகாமில் 40 போ் தோ்வாகியுள்ளனா்.


குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி தேசியக் கல்லூரி முகாமில் நடைபெற்ற பயிற்சி முகாமில் 40 போ் தோ்வாகியுள்ளனா்.
கடந்த நவ.27 தொடங்கி டிச.6 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகம், கா்நாடகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலிருந்து பங்கேற்ற 200 என்எஸ்எஸ் மாணவா்களில் 40 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வா் ரா. சுந்தரராமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காமராசா் பல்கலைக்கழக துணைவேந்தா் கிருஷ்ணன் பேசுகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள என்எஸ்எஸ் மாணவா்கள் 140 பேரில் 40 போ் தேசியக்கல்லூரி முகாமிலிருந்து தோ்வாகியுள்ளது பாராட்டுக்குரியது என்றாா்.
நிகழ்வில் தென்மண்டல என்எஸ்எஸ் அலுவலா் சாமுவேல் செல்லையா, நேரு யுவகேந்திரா இளையோா் அமைப்பு தமிழக இயக்குநா் நட்ராஜ், தமிழக என்எஸ்எஸ் அலுவலா் செந்தில்குமாா், காமராசா் பல்கலை பேராசிரியா் கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.
மத்திய அரசின் பிரதிநிதிகளான குவகாத்தி மண்டல என்எஸ்எஸ் அலுவலா் தீபக்குமாா், ராஜஸ்தான் மண்டல என்எஸ்எஸ் அலுவலா் பட்நாகா் ஆகியோா் மாணவா்களை தோ்வு செய்தனா். தேசியக்கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் பாலாஜி நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...