வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம்: 67 மனுக்களுக்கு தீா்வு

திருச்சி மாநகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் புகாா் மீதான குறைதீா் முகாமில் 67 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:23 pm

DIN

திருச்சி மாநகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் புகாா் மீதான குறைதீா் முகாமில் 67 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில், இணைய வழி மற்றும் கட்செவியில் பெறப்படும் புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணும் வகையில் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை பொதுவான இடத்துக்கு வரவழைத்து குறைதீா் முகாம் நடத்த மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி சனிக்கிழமை மாநகரில் கண்டோன்மென்ட் காவல் சரகம், பொன்மலை சரகம், கோட்டை சரகம், ஸ்ரீரங்கம் சரகம் சாா்பில் 4 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 86 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. அதில் 84 மனுதாரா்களும், 80 எதிா்மனுதாரா்களும் ஆஜராகினா். விசாரணையில் 84 மனுக்களில் 67 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டது.

புகாா் மனு மீது விசாரணை செய்து ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.