ரூ. 6.50 லட்சம் கையாடல்: கூட்டுறவுக் கடன் சங்கசெயலா் மீது வழக்கு
திருச்சி அருகே வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 6.50 லட்சம் கையாடல் செய்ததாக அதன் செயலா்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.


திருச்சி அருகே வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 6.50 லட்சம் கையாடல் செய்ததாக அதன் செயலா்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே வியாழன்மேட்டில் செயல்படும் திருமுருகன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக முத்து, செயலராக ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் தலைவரான முத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், செயலரான ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் ராமலிங்க நகரில் உள்ள திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து சங்கத்துக்கு வர வேண்டிய ரூ. 6.50 லட்சத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரிவித்திருந்தாா்.
இதன்பேரில் போலீஸாா் ஜாா்ஜ் ஜேம்ஸ் மாா்டின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...