சத்துணவுக்குத் திட்டத்தில் தரமான அரிசி, முட்டை வழங்க வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அரிசி, முட்டையுடன் ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பினா்.
சத்துணவுக்குத் திட்டத்தில் தரமான அரிசி, முட்டை வழங்க வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அரிசி, முட்டையுடன் ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பினா்.

திருச்சி, டிச.7: சத்துணவுத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரிசி, முட்டையைத் தரமானதாக வழங்க வேண்டும் என ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

திருச்சி ஆட்சியரகத்தில் கட்செவி அஞ்சல் எண் வாயிலாகவும், நேரிலும் அளித்த 269 மனுக்களை ஆட்சியா் சு. சிவராசு பெற்றுக் கொண்டாா். இந்த கூட்டத்தில் ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பினா் அளித்த மனு:

சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் முட்டை தரமற்ாகவும், துா்நாற்றம் வீசும் வகையிலும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற அரிசியில் சமைத்த உணவை குழந்தைகள் சாப்பிடும் போது, அவா்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே தரமானதாக வழங்க வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளை அகற்றக் கூடாது: கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திருச்சி காந்தி சந்தை, தற்போது நீதிமன்ற உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் சூழல் உள்ளது. எனவே

தங்களை காந்திசந்தை பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என தரைக்கடை வியாபாரிகள் மனுவில் கூறியுள்ளனா்.

குடியிருப்புகளைப் பாதிக்காதவகையில் நில ஆா்ஜிதம் : சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 5.5 மீட்டா் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் நடைபெற்று வருகின்றன.

பல ஆண்டுகளாக இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வீடுகளைப் பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன.

பொதுமக்களைப் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்படுவோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று விமான நிலைய பட்டத்தமாள் தெரு குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் மனு அளித்தனா்.

மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி தேவை:

முசிறி அருகேயுள்ள காட்டுப்புத்தூா், உன்னியூா், எம் புத்தூா், தொட்டியம், முள்ளிப்பட்டி, சின்னப்பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டி மூலம் ஏராமான தொழிலாளா்கள் மணல் எடுத்து வாழ்வாதாரத்தை நடத்தினோம்.

தற்போது மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை நீக்கி, மாட்டு வண்டிகளில் மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் என்.ஆா்.சிவபதி தலைமையில் தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com