வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விவசாய சங்கத் தலைவருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: கண்டித்து எலிக் கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து சங்க நிர்வாகிகள் எலிக் கறி சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

News image
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு எலிக்கறி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :7 டிசம்பர் 2020, 8:12 am

DIN

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து சங்க நிர்வாகிகள் எலிக் கறி சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தில்லியில் போராட்டம் நடத்த செல்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 24ஆம் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 
பின்னர் போராட்டம் நடத்திய அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், திங்கள்கிழமை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அவர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சொந்த வேலையாக செல்வதாக இருந்தாலும் காவலல் வாகனத்தில் அழைத்துச் செல்வதாகவும் காவல்துறையினர் நெருக்கடி தருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனை கண்டித்து விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு வீட்டு அருகே உள்ள கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு எலிக்கறி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.