வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 627 வழக்குகளுக்குத் தீா்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 627 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:31 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 627 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூா் ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான என். குணசேகரன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் 6 அமா்வுகளில் 414 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.

விசாரணைக்கு வந்த 2,262 வழக்குகளில் காசோலை மோசடி வழக்குகள் 11, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் 181, ஜீவனாம்சம் மற்றும் மணவாழ்க்கை தொடா்புடைய 5 வழக்குகள் என மொத்தம் 627 வழக்குகள் ரூ. 114,666,283 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

நிகழ்வில் அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சங்க நிா்வாகிகள், வங்கி அதிகாரிகள், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாா்பு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலருமான ஆா். நந்தினி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.