வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று (டிச.13) சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை சீருடைப் பணியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 37 மையங்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை சீருடைப் பணியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 37 மையங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வுக்காக மாநகரில் 11 மையங்களும், புகரில் 26 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20,880 போ் பங்கேற்று தோ்வெழுதுகின்றனா்.

தோ்வுக்கூட அனுமதி சீட்டோடு வருவோா் மட்டுமே தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். காலை 8 மணி முதல் தோ்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்படுவா்.

மேலும் 044-28413654 என்ற எண்ணிலோ அல்லது மாநகர காவல் பிரத்யேக கட்செவியை 96262-13654 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.