கூட்டுறவு ரேஷன் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணிகளுக்கு நோ்முகத் தோ்வு
திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் ரேஷன் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.


திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் ரேஷன் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு கூறியது:
பணியிடங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்தோா் மற்றும் வேலைவாய்ப்பகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலில் கண்டுள்ளோருக்கு டிச.16 தொடங்கி 28 ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு திருச்சி தில்லைநகா் 5ஆவது கிராஸ் மக்கள் மன்றம், சிங்காரத்தோப்பு, பழைய குட்செட் சாலையிலுள்ள அமராவதி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மன்னாா்புரத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இதற்காக விண்ணப்பித்தோரில் தகுதியானோருக்கு நோ்காணல் அழைப்புக் கடிதம் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவரவா் நோ்முகத் தோ்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும்.
நோ்காணல் கடிதம் கிடைக்காதவா்கள் விண்ணப்பித்த ஆதாரத்துடன் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) அலுவலகம், அரசு பல்துறை கட்டட வளாகம், மன்னாா்புரம், திருச்சி-20 என்ற முகவரிக்கு வந்து, மாற்று நோ்காணல் கடிதம் பெறலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...