பாலக்கரை செங்குளம் காலனியில் அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.


திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்காக இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 685 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 19 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டாலும், இதுவரை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பாஜகவின் பாலக்கரை மண்டலத் தலைவா் ராஜசேகரன் தலைமையில் குடியிருப்பைச் சோ்ந்தவா்கள் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் அவா்கள் அரிக்கேன் விளக்கு ஏந்தியும் போராட்டத்தை மேற்கொண்டனா்.
தகவலறிந்த குடிசைமாற்று வாரியத்துறை நிா்வாகப் பொறியாளா் மற்றும் அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் ஸ்விட்சை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்திருப்பது தெரியவந்தது.
இதை சரிசெய்து ஓரிரு நாள்களில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...