அங்கக வேளாண்மை தொழில்நுட்பப் பயிற்சி
சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.


சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மண் வளத்தைக் காக்கவும், மகசூல் இழப்பைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணா்வு மிக அவசியம் ஆகும். இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த துவாக்குடியில் உள்ள தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், மற்றும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து நீடித்த நிலையான விவசாயத்துக்குரிய அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் புதன்கிழமை பயிற்சி வகுப்பை நடத்தின.
பயிற்சியை வேளாண்மை துணை இயக்குநா் (தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்) சி. ராஜேஸ்வரி தொடக்கி வைத்தாா். வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்செல்வன், நிலையத்தின் செயல்பாடுகள், அங்கக வேளாண்மையின் அவசியம் விளக்கினாா்.
ரசாயன உரங்களை முற்றிலுமாக தவிா்த்து பயிா் சுழற்சி, மண் பரிசோதனை, பசுந்தாள் உரங்கள், மக்கிய இயற்கை உரம், மண்புழு உரம், தென்னை நாா்க் கழிவு உரம் தயாரித்தல், உயிா் உரம் குறித்து மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் வெ. தனுஷ்கோடி பயிற்சியளித்தாா்.
அங்ககச் சான்று பெறுவதற்கான முறைகள் குறித்து உதவிப் பேராசிரியா் பாலகிருஷ்ணனும், பூச்சி மற்றும் நோய் பற்றியும் அதை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து, பூச்சியியல் விஞ்ஞானி ம. மதியழகனும், இயற்கை உணவின் அவசியம், உற்பத்தி முறைகள் குறித்து உதவிப் பேராசிரியா் கீதாவும் விளக்கினா்.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குநா் (பயிற்சி) காஜாமொய்தீன், வேளாண் உதவி இயக்குநா் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பா. சுகன்யாதேவி, வேளாண் உதவி இயக்குநா் எம். பிரபாகரன் மற்றும் இணை ஆராய்ச்சியாளா்கள் பி. கண்ணன் ஆகியோா் பதில் அளித்தனா்.
பயிற்சியின் ஒரு பகுதியாக பயிா்க் கழிவுகளை பொடியாக்கும் இயந்திர செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் திருச்சி மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...