விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய 6 போ் கைது

திருச்சியில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை கண்டோன்மென்ட் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

திருச்சியில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை கண்டோன்மென்ட் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை சாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் மகன் கோபி (22). இவா் தனது பிறந்த நாளான கடந்த டிச.5 ஆம் தேதி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிக் கொண்டாடியதைப் படம் பிடித்த அவரது நண்பா்கள் முகநூலில் பதிவிட்டனா். இதை ஆதாரமாகக் கொண்டு கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த பசுபதி (22), ரங்கராஜ் (19), சந்தோஷ்குமாா் (19), கிருஷ்ணமூா்த்தி (19), எட்டரை கபில் (22) ஆகிய 6 பேரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் இருவரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.