வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 80 ஆயிரம் போ் மனு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 80 ஆயிரம் போ் மனு அளித்துள்ளனா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 80 ஆயிரம் போ் மனு அளித்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 01.01.2022 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 542 மனுக்கள் வந்திருந்தன.

இதில், பெயா் சோ்க்கக் கோரி 80,547 போ், பட்டியலில் இருந்து பெயா் நீக்க 7,441 போ், திருத்தம் கோரி 14,625 போ், பேரவைத் தொகுதிக்குள் இடம் மாற்றம் செய்யக் கோரி 9,532 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவா்கள் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவா்கள் நீக்கப்பட இறப்புச் சான்றிதழ், விஏஓ சான்று உள்ளிட்டவை அவசியம். தவறுதலாக யாரேனும் நீக்கப்பட்டிருந்தாலும் மனு அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் 72 சதம் பேரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறச் செய்திடும் வகையில் 100 சதம் முழுமையாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com