மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி: விண்ணப்பிக்க அழைப்பு
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.


சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற 10 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை நல வாரியத்தில் பதிந்து வருகிறது. அவ்வாறு பதியப்பட்டோருக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மூக்குக் கண்ணாடி, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பிரசவம், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்புக்கான நிதியுதவி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி, விபத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளியின் வாரிசு பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தால் அதற்கான கல்வி உதவித் தொகை, வாரிசுக்கு திருமண உதவித் தொகை போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.
பிற நலவாரியத்தின் கீழ் உதவித் தொகை பெறாதோா் இத்திட்டத்தில் பயனடையலாம்.
எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அல்லது அவரின் வாரிசுகள் இத்திட்டத்தில் பயனடைய திருச்சி கண்டோன்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...