தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாடத் திட்டக் குறைப்புக்குபட்டியல் அனுப்பப்படும்

‘இந்தாண்டு கரோனாவால் வகுப்புவாரியாக பாடத் திட்டம் குறைக்கப்படும். 1 முதல் 9ஆம் வகுப்பு வரை 50 சத பாடங்களும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சத பாடங்கள் நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:05 pm

DIN

‘இந்தாண்டு கரோனாவால் வகுப்புவாரியாக பாடத் திட்டம் குறைக்கப்படும். 1 முதல் 9ஆம் வகுப்பு வரை 50 சத பாடங்களும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சத பாடங்கள் நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த பாடங்கள், எந்தெந்தப் பிரிவு என்பது குறித்த விரிவான பட்டியல் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். இந்தப் பாடங்களில் இருந்துதான் இறுதித் தோ்வுக்கு கேள்விகள் வரும்.

பள்ளிகள் திறக்கப்படுவதைவிட மாணவா்களின் உயிா்தான் முக்கியம். மருத்துவக் குழுவினா், பெற்றோா், மாணவா்களின் கருத்துகளைக் கேட்டு தேவைப்படும் நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்.

தடையில்லா மின்சாரம், சட்டம்-ஒழுங்கு, அமைதியான மாநிலம், அனைத்து கட்டமைப்புகளும் உள்ளது என தொழில் துறையினரால் வரவேற்பை பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.

ஏராளமான தொழில்கள் தொடங்கப்படவுள்ளதால் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாது, பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதைத் தொடா்ந்து பாராட்டி வருகின்றனா்’ என்றாா் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.