தேவேந்திர குல வேளாளா் நலச்சங்கம் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா்.
ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பட்டியல் பிரிவிலுள்ள குடும்பன், காலாடி, தேவேந்திர குலத்தான், பள்ளன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும், பட்டியல் வெளியேற்றத்தை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரகம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ப.ச. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கோ. சங்கா், ம. ஐயப்பன், பொன்னுசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி ஏராளமானோா் பேரணியாக வந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com