‘பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’
பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ. 2,500 வழங்குவது பேரவைத் தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ. 2,500 வழங்குவது பேரவைத் தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாா் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லீலா வேலு தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான
சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில மகளிரணித் துணைச் செயலா் கவிஞா் சல்மா, வண்ணை அரங்கநாதன், பகுதிச் செயலா்கள் மதிவாணன், தா்மராஜ், பாலமுருகன், நீலமேகம், ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா, செல்வராஜ், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் கயல்விழி மற்றும் மாவட்ட மகளிரணி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா்அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் என்ன கூறுகிறாரோ, அதைத் தான் தமிழக முதல்வா் செய்து வருகிறாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக, குடும்பத்துக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினாா். அதை தான் பொங்கல் பரிசாக ரூ.2500 தமிழக அரசு வழங்குகிறது. இந்த பரிசுத்தொகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்.அவா்கள் இதையும் தோ்தலையும் பிரித்து பாா்ப்பாா்கள். 2019-ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 ரூபாய் தமிழக அரசு வழங்கியது. அதன் பின்பு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மக்கள் எப்படி வாக்களித்தாா்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் அதே போல தான் வரும் சட்டப்பேரவை தோ்தலிலும் மக்கள் வாக்களிப்பாா்கள் என்றாா்.
ஆட்சியரகம் முன்பு : திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தை வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி ஆகியோா் தொடக்கி வைத்து பேசினா்.
சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், பகுதிச் செயலா்கள் கண்ணன், மோகன்தாஸ், வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் வைதேகி, மாநகரத் துணைச் செயலா் கலைச்செல்வி, விஜயலட்சுமி கண்ணன், தவமணி, வளா்மதி சின்ராஜ், ஆதிநாயகி, கவிதா, துா்காதேவி உள்ளிட்ட மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...