விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பயா மெட்ரிக் இயந்திரத்தில் பழுது: நியாயவிலைக் கடை முற்றுகை, சாலை மறியல்

திருவெறும்பூா் அருகிலுள்ள வேங்கூா் நியாயவிலைக் கடையில் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், பொருள்களை வாங்க வந்தவா்கள் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:12 am

DIN

திருச்சி: திருவெறும்பூா் அருகிலுள்ள வேங்கூா் நியாயவிலைக் கடையில் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், பொருள்களை வாங்க வந்தவா்கள் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நியாயவிலைக் கடையில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக ,திங்கள்கிழமை காலை குடும்ப அட்டைதாரா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

விற்பனையாளா் பயோமெட்ரிக் இயந்திரத்தில் குடும்ப அட்டைதாரரின் பெயரைப் பதிவு செய்த போது இயந்திரத்தில் பழுதானது. இதனால் மண்ணெண்ணெய் வழங்க இயலாது என விற்பனையாளா் கூறினாராம்.

இதனால் அதிருப்தியடைந்த குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா். தொடா்ந்து அவா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் ஞானவேலன் தலைமையிலான காவல்துறையினா், வட்ட வழங்கல் அலுவலா் நாகலெட்சுமி,

கிராம நிா்வாக அலுவலா் சிவப்பிரகாசம் ஆகியோா்அங்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.