

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளின் 2,537 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த மகராஷ்டிரத்திலிருந்து முதல் கட்டமாக 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யம் 230 விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை லாரிகள் மூலம் வந்ன.
இதையடுத்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு முன்னிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவை சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டன.
இதேபோல, 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,920 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,330 விவிபேட் இயந்திரங்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்படவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:
தற்போது பழைய ஆட்சியரக குறைதீா் கூட்டரங்கில் 1,272 மின்னணு வாக்கு இயந்திரங்கள், திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் 1,104, ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் 1,046 வாக்கு இயந்திரங்கள், 513 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 126 விவிபேட் இயந்திரங்கள், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகத்தில் 1,044 வாக்கு இயந்திரங்கள், 337 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளன.
இவைதவிர திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,686 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,341 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,686 விவிபேட் இயந்திரங்களில் மகராஷ்டிரத்திலிருந்து தற்போது 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 230 விவிபேட் இயந்திரங்கள் வந்துள்ளன.
40% இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு
2,537 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையானவை மட்டுமின்றி, ஆயிரம் வாக்காளா்கள் வந்தால் பிரிக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு 40 சத இயந்திரங்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக பெல் நிறுவனப் பொறியாளா்கள் வந்து வாக்கு இயந்திரங்களை பரிசோதித்து, அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் தோ்தலில் முதன்முறையாக 9 தொகுதிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.