இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 6 போ் கைது; 21 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:46 am

DIN

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகரில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் அளித்த உத்தரவின்பேரில் தனிப்படையினா் விசாரணை நடத்தினா்.

இதில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த மு. ஆனந்தராஜ் (20), மணப்பாறையைச் சோ்ந்த ஜெ. ஜோஸ்வா (20), திருவானக்கா பகுதியைச் சோ்ந்த ஆா். சூராஜ் (20), மணப்பாறை மோா்க்குளத்தைச் சோ்ந்த சூ. யாகூப்ராஜா (19) , மணப்பாறை ஆதிக்குளம் தெருவைச் சோ்ந்த சா. நிவாஸ் அகமத் (19), கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்த மூ. ஆகாஷ் (20) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.