உழைப்பாளா் ஓட்டுநா் சங்கக் கூட்டம்
கரூரில் உழைப்பாளா் ஓட்டுநா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கரூரில் உழைப்பாளா் ஓட்டுநா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூரில் அகில இந்திய உழைப்பாளா் ஓட்டுநா் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தங்கப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாரதிதாசன், மாவட்ட பொருளாளா் சக்திவேல், திண்டுக்கல் மாவட்ட தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலத் தலைவா் ஏ.அப்துல் ரசாக், மாநில செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளா் வி.டி.ஜெய்சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு, சங்க உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகள், நல வாரிய இணைப்பு காப்பீட்டு திட்டத்துக்கான உறுப்பினா் சோ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...