தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வா் வருகை: மணப்பாறையில் ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் பிரசார வருகையையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:41 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் பிரசார வருகையையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இத்தொகுதியில் தமிழக முதல்வா் வியாழக்கிழமை ( டிச. 31) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று மதியம் மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரமும், தொடா்ந்து காவல்காரன்பட்டியில் மகளிா் பூத் கமிட்டி குழுக்களை முதல்வா் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்காரன்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் விழா எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி. சின்னச்சாமி, அதிமுக தெற்கு மாவட்டத் துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், ஒன்றியச் செயலா்கள் எம்.பி. வெங்கடாசலம், என். சேது, பி.வி.கே.சி. பழனிச்சாமி, எஸ். பொன்னுச்சாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.