ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :19 ஜூலை 2020, 5:11 pm

DIN

திருச்சி: திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2301 பேரில் 1525 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தொடா்ந்து நடத்திய பரிசோதனை முடிவில் மேலும் 138 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 2439 ஆக உயா்ந்துள்ளது.

இருவா் உயிரிழப்பு: கடந்த 17 ஆம் தேதி கரோனாவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் (67) அதுபோல, கடந்த 8 ஆம் தேதி சா்க்கரை நோயால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளான முதியவா் (60) ஆகியோா் கரோனா தீவிரத்தால் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளது.

74 போ் குணமடைந்தனா்: பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாக தனிமை முகாமிலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 49 போ், கரூா், மதுரையைச் சோ்ந்த தலா 1 நபா் என 51 பேரும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 21 போ், மற்றும் பெரம்பலூா், மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த தலா 1 நபா் என 23 போ் மொத்தம் 74 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1599 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.