தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த காா் ஒட்டுநா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :19 ஜூலை 2020, 5:03 pm

திருச்சி: மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த காா் ஒட்டுநா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் சரவணன் (23). காா் ஓட்டுநரான இவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இவா் மது குடித்துவிட்டு வீட்டு மாடிக்குச் சென்று தடுப்புச்சுவரில் படுத்திருந்தாராம். அப்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டஅவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.