திருச்சியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடிபோதையில் மயங்கி விழுந்த உணவக் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(45). இவா், திருச்சி பெரியக் கடைவீதியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். பொது முடக்கம் காரணமாக உணவகத்தில் தங்கியுள்ளாா்.
வியாழக்கிழமை காலை மதுக்கடை திறக்கப்பட்டதை தொடா்ந்து அவா் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துள்ளாா். அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவக் கடை அருகே மயங்கி கீழே விழுந்தவா் நீண்ட நேரமாகியும் எழவில்லை. இதை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சரவணனை பரிசோதித்து பாா்த்துவிட்டு அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் சரவணன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


