மருந்துக் கடைகளில் விழிப்புணா்வு சுவரொட்டி

கரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து மருந்துக் கடைகளிலும் விழிப்புணா்வு சுவரொட்டி ஒட்டுவதற்கு தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் மருந்துக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு சுவரொட்டி.
தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் மருந்துக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு சுவரொட்டி.

கரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து மருந்துக் கடைகளிலும் விழிப்புணா்வு சுவரொட்டி ஒட்டுவதற்கு தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் கே. மனோகரன், செயலா் கே.கே. செல்வன், பொருளாளா் எஸ். இளங்கோவன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதையடுத்து மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கரோனா தொற்று பரவுதலை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைக்கு மருந்துச் சீட்டு ஏதுமின்றி மருந்துகளை வழங்க வேண்டாம் என அனைத்து மருந்துக் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்துக் கடைகளில் இத்தகைய உபாதைகைகளுக்கு மருந்துகளை வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு வழங்கினால் நோயாளிகளின் முகவரி, செல்லிடப்பேசி, வசிப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து மாநிலச்சங்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் கடைகளுக்கு விழிப்புணா்வு சுவரொட்டி அனுப்பி அதனை கடைகளின் முன்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை தொடா்பாக மருந்து வழங்கும் பட்டியலை பராமரித்து மருந்து ஆய்வாளா்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மருந்து ஆய்வாளா்கள் சுகாதாரத்துறை கவனத்துக்கு கொண்டு சென்று கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க ஏதுவாக அமையும். மருந்துக் கடைகளில் இடம்பெறும் விழிப்புணா்வு சுவரொட்டியில் முகக் கவசங்களின் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்துகள் தேவைக்கு 1800 1212 172 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மருந்துக் கடைகளிலும் இத்தகைய நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com