எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மின்வாரிய துறை தனியார் மயமாவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய துறை தனியார் மயமாவதை கண்டித்து திருச்சியில் மின்சார ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :18 மே 2020, 5:43 am

மின்வாரிய துறை தனியார் மயமாவதை கண்டித்து திருச்சியில் மின்சார ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, மின் வினியோகத்தை தனியார் மயமாக்க கூடாது, 2020 மின்சார சட்டத்திருத்த  மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொமுச மாநில துணைத்தலைவர் மலையாண்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், தொழிலாளர் சம்மேளன சிவசெல்வன், கணேசன், இன்ஜினியர் சங்கம் மற்றும் பொறியாளர் கழக திருச்சி மாவட்ட செயலாளர் விக்ரமன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரியம் கோட்ட செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.