ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தீா்த்தவாரி

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 9 ஆம் திருநாளான புதன்கிழமை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

News image
img_20201109_wa0068_0911chn_15_4
Updated On :9 நவம்பர் 2020, 10:06 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 9 ஆம் திருநாளான புதன்கிழமை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

ஐப்பசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிராா்.

இதில் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.

நிறைவு நாளான புதன்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.