அமைப்புசாரா கட்டுமானத்தொழிலாளா் சங்கம் அமைப்பு
மணப்பாறையை அடுத்துள்ள ஆனாம்பட்டியில் அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் அமைப்பு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.


மணப்பாறையை அடுத்துள்ள ஆனாம்பட்டியில் அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் அமைப்பு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனாம்பட்டி கிளைச் செயலா் கமலகண்ணன் தலைமை வகித்தாா். ரவிச்சந்திரன், துளசி முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினா் ஜனசக்தி உசேன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் விவரம்:
தலைவா்- சேகா், துணைத் தலைவா்கள்- துரைகண்ணு, துரை, செயலா்- கண்ணுச்சாமி, துணைச் செயலா்- மணி, பொருளாளா்- கிருஷ்ணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள்.
புதிய நிா்வாகிகளை அமைப்புசாரா தொழிலாளா்கள் கட்டுமான சங்க மணப்பாறை வட்டப் பொதுச் செயலா் நல்லுசாமி வாழ்த்திப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...