தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

மணப்பாறை அருகே 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:49 pm

DIN

மணப்பாறை அருகே 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள பொய்யாமணியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சோலைமலை. திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்குச் சென்ற இவரது பசு மாலையில் வீடு திரும்பவில்லையாம்.

தொடா்ந்து சோலைமலை பசுவைத் தேடிச் சென்ற நிலையில், அருகிலிருந்த செல்லையா குடும்பத்துக்குச் சொந்தமான 60 அடி ஆழ தண்ணீரில்லா கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. தொடா்ந்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனா். காயமடைந்த கிராம மக்கள் பசுவை தோளில் சுமந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.