மணப்பாறையில் காா்த்திகை தீப நிகழ்வுகள்
மணப்பாறையில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சிறப்பு வழிபாடு, மகா தீபம், சொக்கப்பனை நிகழ்வுகள் நடைபெற்றன.


மணப்பாறையில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சிறப்பு வழிபாடு, மகா தீபம், சொக்கப்பனை நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவையொட்டி மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, பின்னா் கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அப்போது பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை சொக்கப்பனையில் வீசி வழிபட்டனா். மேலும், காளியம்மன் கோயில், மாதுளாம்பிகை உடனாய நாகநாத சுவாமி, வடிவுடை நாயகி உடனாய அகத்தீசுவரா், விடத்திலாம்பட்டி மலையில் உள்ள ஸ்ரீவள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியா், மயிலாடும்பாறை வேடரூப சுப்ரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீப வழிபாடு, சொக்கப்பனை நிகழ்வுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...