ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:48 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழாண்டில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோயிலின் காா்த்திகை கோபுரம் முன்பு 20 அடி உயரத்திலும், 5 அடி அகலத்திலும் பனை ஓலைகளால் சொக்கப்பனை கட்டப்பட்டது.

இதையொட்டி காலை 7.30 மணிக்கு கருவறையிலிருந்த புறப்பட்ட நம்பெருமாள், சந்தனு மண்டபத்தை வந்தடைந்தாா். பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளிய அவா், அலங்காரம், அமுது செய்தலுக்குப் பின்னா் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி மாலை 5 மணிக்கு கருவறை சென்றடைந்தாா்.

இதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீஉத்தம நம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் புறப்பாடாக, இரவு 8 மணிக்கு பச்சைக் கதிா் அலங்காரத்தில் கருவறையிலிருந்து புறப்பாடான நம்பெருமாள், 8.30 மணிக்கு காா்த்திகை கோபுரம் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை அருகே வந்தாா். அதைத் தொடா்ந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பின்னா் தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளிய நம்பெருமாள், இரவு 9.15 மணிக்கு சந்தனு மண்டபத்தை அடைந்தாா். அங்கு ஸ்ரீ முகப்பட்டயம் படித்தலைக் தொடா்ந்து , திருக்கைத்தல சேவையுடன் சந்தனுமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கருவறை சென்றடைந்தாா் நம்பெருமாள்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.