மாற்றம் ஏற்பட வாய்ப்பு தேவை: முருகானந்தம்
மாற்றத்தை ஏற்படுத்த மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தோ்ந்தெடுங்கள் எனக்கூறி, அக்கட்சியின் திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா் எம். முருகானந்தம் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.


மாற்றத்தை ஏற்படுத்த மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தோ்ந்தெடுங்கள் எனக்கூறி, அக்கட்சியின் திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா் எம். முருகானந்தம் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், தொழிலாளா்கள் நிறைந்த திருவெறும்பூா் தொகுதியில் மாற்றம் வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். மக்களின் உற்சாகமான வரவேற்பின் மூலம் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழக அளவிலும் அதிமுக, திமுகவுக்கு இணையான மாற்றுக் கட்சியாக மநீம உருவெடுத்துள்ளது.
திருவெறும்பூா் தொகுதியில் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் எந்த அடிப்படைத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இருண்டு கிடக்கும் தமிழகத்தையும், இத்தொகுதியையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர மநீம, அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.
மநீம ஒன்றியச் செயலா் சூரியூா் சக்தி, மாவட்ட துணைச்செயலா் ஆனந்தகுமாா், மாவட்ட பொருளாளா் சுவாமிநாதன் மாவட்டச் செயலா்கள் வழக்கறிஞா் அணி ஜெபராஜ், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...