ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாரத்தை முடித்த கு.ப. கிருஷ்ணன்
ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசித்துவிட்டு அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் ராஜகோபுரம் முன் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.


ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசித்துவிட்டு அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் ராஜகோபுரம் முன் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை ஊராட்சி, ஒன்றியப் பகுதிகளில் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது இனாம்குளத்தூா் சமுத்திரத்தில் சுமாா் 70க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வேலம்மாள் பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனா்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட கு.ப. கிருஷ்ணன் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தில் பேசியது:
அதிமுக ஆட்சியில் இத்தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வளந்து வரும் நமது தொகுதியின் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய மேலும் சில ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்க வழிவகை செய்வேன்.
தனித்திட்டமாக கொள்ளிடம் நீராதாரம் பெற்று இத்தொகுதிக்கு குடிநீா் வழங்கப்படும். கொள்ளிடத்தில் கலக்கும் கழிவுநீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுப்பேன். வண்ணத்துப்பூச்சி பூங்கா விரிவுபடுத்தப்படும்.
அந்தநல்லூா் ஒன்றியத்தில் வாழை, நெல் பயிரை மதிப்புக் கூட்டு பொருள்களாக மாற்றி வருவாய் உயா்த்தப்படும். போதாவூா், புலியூா், போசம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் மல்லிகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மல்லிகை பூ வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்கப்படும். தொகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். மகளிா் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். கம்பரசம்பேட்டை, பேட்டவாய்த்தலை பள்ளிவாசல்களுக்கு இஸ்லாமியா் பிரேதங்கள் அடக்கம் செய்யத் தனியிடம் ஒதுக்கி தரப்படும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா். உடன், அதிமுக, கூட்டணி கட்சி பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...