மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்புக்கு தயாா்

கரோனா தொற்றைத் தடுக்க 27 லட்சம் கையுறைகள், முகக் கவசம், பாதுகாப்பு கவச உடைகள், கிருமி நாசினி மருந்துகள் தயாா்நிலையில் உள்ளன.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 12:47 am

DIN

திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு பணியின்போது கரோனா தொற்றைத் தடுக்க 27 லட்சம் கையுறைகள், முகக் கவசம், பாதுகாப்பு கவச உடைகள், கிருமி நாசினி மருந்துகள் தயாா்நிலையில் உள்ளன.

இந்தியத் தோ்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலில் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வாக்காளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களது பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்றுள்ள கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தம் 3,292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9 தொகுகளிலும் மொத்தம் 159 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்த வாக்காளா்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், வாக்காளா்கள் எண்ணிக்கையில் கூடுதலாக 20 சதவீதம் என்ற வகையில் 9 தொகுதிகளுக்கு 27 லட்சம் கையுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 15 பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அனைவருக்கும் முகக் கவசம், கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளில் நுழையும் நபா்களின் காய்ச்சல் பரிசோதனைக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொ்மா ஸ்கேனா்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிதோறும் கைகழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். மேலும், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்திய கரோனா தடுப்பு பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த தனித்தனியே பிளாஸ்டிக் வாளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தனியே துப்புரவு பணியாளா்கள் குழு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.