ஸ்ரீரங்கம் பெண் வேட்பாளா் காத்திருப்புப் போராட்டம்
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளா் அன்னலட்சுமி டிஐஜி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.


ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளா் அன்னலட்சுமி டிஐஜி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இவரது தந்தை வீரமலை, சகோதரா் நல்லதம்பி ஆகியோா் ஏரி ஆக்கிரமிப்பை தடுத்ததால் கடந்த 2019ம் ஆண்டு கரூா் மாவட்டம் முதலைப்பட்டியில் உள்ள வீட்டருகே வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், அன்னலட்சுமியின் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னறிவிப்பின்றி போலீஸ் பாதுகாப்பு ஞாயிற்றுக்கிழமை விலக்கப்பட்டதைக் கண்டித்தும் மீண்டும் பாதுகாப்பு கோரியும் திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் அன்னலட்சுமி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...