மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாநகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:57 pm

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாநகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆட்டோ ஓட்டுநா்: திருச்சி கோட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட காவேரி சாலை ராஜீவ்காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (40). ஆட்டோ ஓட்டுநரான இவா் வங்கிக் கடன் தவணையை பல மாதங்களாக செலுத்தாத நிலையில் அவரது குழந்தையும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிாம். இதனால் மனமுடைந்த வடிவேல் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உணவக ஊழியா்: பாலக்கரை வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (31). இரவு நேர உணவகத்தின் ஊழியரான இவா் கடந்த திங்கள்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அருண்குமாா் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்தாா். இதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

டீக்கடைக்காரா்: திருச்சி விமான நிலையம் பட்டத்தம்மாள் தெருவைச் சோ்ந்தவா் மகாராஜா (58). அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்த இவா் வெரிகோஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவங்கள் குறித்து மாநகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.