போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளிவாசல்கள் கூடுதல் நேரம் இயங்க அனுமதி தேவை

ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:56 pm

DIN

ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமுமுக திருச்சி மாவட்டக் கிளை சாா்பில், அதன் தலைவா் ஏ. ஷேக்அஹமது தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளில் மத வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. வரும் ஏப்.13 முதல் இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்குகிறது.

இந்த மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் கூட்டு வழிபாடுகள் நடைபெறுவது முக்கிய நிகழ்வாகும். இதைக் கருத்தில் கொண்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்துவோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதே கோரிக்கை தொடா்பாக முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்டக் கிளை சாா்பிலும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.