அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
திருச்சி விமான நிலையம்
Updated On :1 பிப்ரவரி 2021, 5:01 am

DIN

இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வழக்கம் போல, காலையில் வரும் ஏர் இந்தியா, இண்டிகோ விமானத்திற்காக, 200க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். சரியாக காலை, 8 மணிக்கு, விமான நிலையத்தை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், 'உங்களது தொந்தரவு தாங்க முடியவில்லை. விமான நிலையத்தில் பாம் போட போகிறேன்' என்று மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர், சிஐஎஸ்எப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, விமான நிலையத்தில் 'அலாரம்' ஒலிக்க செய்த சிஐஎஸ்எப் போலீசார்,  பயணிகளை அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். விமான நிலையத்தில், மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே, விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமும் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் தில்லி இஸ்ரேல் தூதரகம் முன்பு வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், பயணிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் சோதனை நிறைவு. வெடிகுண்டு மிரட்டல் புரளி. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்றடுக்கு  பாதுகாப்புடன் மீண்டும் விமான நிலையம் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.