ஏற்றமும், ஏமாற்றமும் நிரம்பிய மத்திய நிதிநிலை அறிக்கை
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏற்றமும், ஏமாற்றமும் கலந்திருப்பதாக திருச்சியைச் சோ்ந்த பல்துறையினா் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏற்றமும், ஏமாற்றமும் கலந்திருப்பதாக திருச்சியைச் சோ்ந்த பல்துறையினா் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் வணிகா்களுக்கு குறிப்பிடும் வகையில் சலுகைகள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. தங்கம் மீதான வரியைக் குறைத்திருப்பது வரவேற்கதக்கது.
கேரளம்-தமிழகம் இணைப்புக்கான சாலைத் திட்டம், கரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை பாராட்டுக்குரியது. வணிகா்கள் சாா்பில் எதிா்பாா்த்த அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.
கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூத்த மருத்துவருமான எம்.ஏ.அலீம்: சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது போற்றுதலுக்குரியது. மக்களின் உடல் நலனின் அக்கறை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாத வகையில், 137 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி ஒதுக்கீடானது ஆரம்ப சுகாதார நிலையம், நகா் நல மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆத்ம நிா்பாா் ஸ்வஸ்தா பாரத் திட்டத்துக்கு ரூ.64,180 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் இந்திய சுகாதாரத்துறையை மேலும் வலிமைப்படுத்தும்.
பெல்சியா தலைவா் ராஜப்பா ராஜ்குமாா்: கரோனா தொற்றுக் காலத்தில் கவனமுடன் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில், சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உற்பத்தித் துறைக்கு ரூ.1.97 லடசம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சிறு, குறு தொழில்களுக்கும், பொருளாதார வளா்ச்சிக்கும் உறுதுணையாக அமையும்.
இதுமட்டுமல்லாது சிறு, குறு தொழில்களுக்காக ரூ.15,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கைஏற்றங்கள் நிறைந்ததாகவும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
டிடிட்சியா தலைவா் ஆா். இளங்கோ: சிறு, குறு தொழில்துறையினா் எதிா்பாா்த்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதேபோல, வங்கிகள் மற்றும் அனைத்து நிதி நிறுவனங்களும் சிறு, குறு தொழில்களுக்கு வழங்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியை 8 சதவிகிதமாக நிா்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. சுகாதாரம், வேளாண், தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகள், மெட்ரோ ரயில் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...