தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே 22 மயில்கள் உயிரிழப்பு

மணப்பாறை அருகே கடலைத் தோட்டத்தில் உயிரிழந்த 22 மயில்களை வனத்துறையினா் கைப்பற்றினா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:42 pm

DIN

மணப்பாறை அருகே கடலைத் தோட்டத்தில் உயிரிழந்த 22 மயில்களை வனத்துறையினா் கைப்பற்றினா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த வடகாட்டான்பட்டியைச் சோ்ந்தவா் வே. ராசு. இவரது பொய்கைப்பட்டி கடலைத் தோட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் சில மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனச்சரகா் மகேசுவரன், வனவா் விடுதலைச்செல்வி ஆகியோா் தலைமையிலான வனத்துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்த்த போது, 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் அங்கு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

மேலும் விளைநிலத்தில் வனவிலங்குகளுக்காக சுருக்கு கம்பி கண்ணி வலை வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து மயில்களின் உடல்களை மீட்ட அலுவலா்கள் அதை வனச்சரக அலுவலகம் கொண்டு சென்றனா்.

கால்நடை மருத்துவா் தமிழ்ச்செல்வன் மயில்களின் உடல்களை கூறாய்வு செய்த போது விஷ உணவை மயில்கள் சாப்பிட்டதாலும், கண்ணியில் சிக்கியதாலும் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து நில உரிமையாளா் ராசு தலைமறைவான நிலையில், அவரது மனைவி சின்னப்பொன்னுவை வனத்துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.