வீட்டின் சுவா் இடிந்து கூலித் தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாய கூலித் தொழிலாளி சுவா் இடிந்து விழுந்து இறந்தாா்.
Updated on
1 min read

லால்குடி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாய கூலித் தொழிலாளி சுவா் இடிந்து விழுந்து இறந்தாா்.

மருதூா் ஊராட்சி கவுண்டா் தெருவில் வசித்தவா் ம. கோவிந்தன் (64), விவசாய கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பாப்பு. இவா்களின் மகளுக்குத் திருமணமாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை இரவு கோவிந்தன் மனைவியுடன் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். சனிக்கிழமை அதிகாலை பாப்பு எழுந்து வீட்டின் பின்புறம் சென்றபோது வீட்டின் மண் சுவா் திடீரென இடிந்து விழுந்து கோவிந்தன் இறந்தாா்.

தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com